வற்றும் ஜீவ நதிகள்: தண்ணீருக்காக மத்திய ஆசியாவில் போர் வரும்?

பதிவு செய்த நாள்: மார் 24,2016 18:48
- எழுத்தின் அளவு:
குவா (உஸ்பெஸ்கிஸ்தான்):
மத்திய ஆசியாவில் பாயும் இரண்டு ஆறுகள் வற்றி வருவதால், தண்ணீருக்காக நாடுகளுக்கு இடையே போர் ஏற்படும் அபாயம் உள்ளது.
சீனாவின் ஜின்ஜியாங் எல்லைப் பகுதியில் டியான் ஷான் மலைத்தொடர் உள்ளது. சீனாவின் சொர்க்கபுரி என்றே இது அழைக்கப்படுகிறது. இங்கிருந்து சூர், டார்யா என இரண்டு வற்றாத ஜீவ நிதிகள், அப்பகுதியில் உள்ள நாடுகளுக்கு தேவையான நீரை வழங்கி வந்தன.
இந்த இரு நதிகளும், 1961ம் ஆண்டிலிருந்து 2012ம் ஆண்டு வரை 27 சதவீதம் வறண்டுவிட்டதாக ஜெர்மன் ஆய்வு மையம் கடந்த ஆண்டு தெரிவித்தது.
இந்த மலைத்தொடரை ஒட்டியுள்ள பர்க்கானா பள்ளத்தாக்கு பகுதி, உலகில் உள்ள செழிப்பான பகுதிகளில் ஒன்று. இந்த பள்ளத்தாக்குப் பகுதியை சுற்றிதான் அடர்ந்த பனிமலை இருந்தது. இங்கிருந்து உற்பத்தியாகித் தான் சூர், டார்யா ஆகிய இரண்டு ஜீவ நதிகளும் பாய்கின்றன. தற்போது பனிமலை இருந்ததற்கான சுவடுகள் பாதியாக மறைந்து வறட்சியை நோக்கி இப்பள்ளத்தாக்கு செல்வதாக கூறப்படுகிறது.
இதே நிலை நீடித்தால், 2050-ல் மத்திய ஆசிய பகுதியில் உள்ள நாடுகளான உஸ்பெகிஸ்தான், துர்க்மெனிஸ்தான், கிர்கிஸ்தான், கஜகஸ்தான், ஈரான், சீனா ஆகிய நாடுகள் தங்களுக்குள் தண்ணீருக்காக போரிடும் நிலை உருவாகும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
Post a Comment