சூப்பர் சிங்கர் சர்ச்சை குறித்து பிரபல தொலைக்காட்சி விளக்கம்
ஏற்கெனவே திரைப்படங்களில் பாடல் பாடியவரை வெற்றியாளராக கூறி கொண்டாடிய அந்த பிரபல தொலைக்காட்சி குறித்து பல எதிர்ப்புகள் வந்தன.
இந்நிலையில் இப்பிரச்சனை குறித்து அத்தொலைக்காட்சியின் தலைமை நிர்வாகி கூறுகையில், எங்களுடைய விதிமுறையில் எங்கேயும் திரைத்துறையிலிருந்து பாடகராக உள்ளவர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பங்கேற்க கூடாது என்று கூறப்படவில்லை.
ஆனந்த், ஆரம்பத்தில் அளித்த பேட்டியிலேயே தான் படங்களில் பாடியுள்ளதாகவும் ஆனால் தகுந்த வாய்ப்பு கிடைக்காததால் ஒரு மாற்றத்துக்காக சூப்பர் சிங்கரில் கலந்து கொள்வதாகவும் கூறியுள்ளார்.
திரைத்துறையில் உள்ளவர்கள் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளக் கூடாது என்கிற விதிமுறை முதலில் இருந்தது உண்மைதான். ஆனால் அது சரியாக வராததால் அந்த விதிமுறையை நீக்கிவிட்டோம் என்று கூறியுள்ளார்.
Post a Comment