விபத்தில் சிக்கி தப்பிய ஜி.வி.பிரகாஷ் மற்றும் ஆர்.ஜே.பாலாஜி – அதிர்ச்சி தகவல்கள்
தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக இருந்து கதாநாயகனாக மாறியவர் ஜி.வி.பிரகாஷ்.
இவர் தற்போது கடவுள் இருக்கான் குமாரு படத்தில் நடித்து வருகிறார். இதில் காமெடியனாக RJ பாலாஜி நடிக்கிறார் இப்படப்பிடிப்பில் காரில் செல்லும் போது கண்டெய்னர் லாரி மோதி கார் விபத்தில் சிக்கியது.
இதில் ஆர்.ஜே.பாலாஜிக்கு மூக்கிலும், ஜி.வி.பிரகாஷிற்கு முகம் மற்றும் தோள்பட்டையிலும் அடிபட்டிருக்கிறது. விபத்தைத் தொடர்ந்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.
இருவரும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள். இருவரையும் பரிசோதித்த மருத்துவர்கள் பெரியளவிற்கு பாதிப்பு இல்லை என்பதால் மீண்டும் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது
Post a Comment