“100 லிட்டர் பாலை திருடி பாலாபிஷேகம்”
முன்னணி நடிகர்களின் படம் வெளிவரும் போது திரையங்குங்களில் ரசிகர்கள் பாலாபிஷேகம் செய்வது வழக்கம். இந்நிலையில் சமீபத்தில் வெளிவந்த தெறி படத்தின் கட்அவுட்டுகளுக்கு பாலாபிஷேகம் செய்ய 100 லிட்டர் ஆவின் பால் திருப்பட்டதாக கோயம்புத்தூர் பால் முகவர்கள் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.
இது குறித்து அந்த சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் :-
“பெரிய நடிகர்களின் படம் வருகையில் பால் அபிஷேகம் செய்வது வாடிக்கை . ஆனால் சமீபகாலமாக இப்படி படங்கள் வரும்போது எங்கள் வயிற்றில் நெருப்பை கட்டிக்கொண்டு இருக்கிறோம். பால் திருட்டு சகஜமாகி வருகிறது. சிறிய அளவில் இருந்து இந்த திருட்டு இப்போது விஸ்வரூபம் எடுத்து 100 லிட்டர் என்ற அளவில் வந்து இருக்கிறது.
சமீபத்தில் வந்த தெறி படத்திற்காக கோயம்புத்தூரின் பல ஆவின் பூத்துகளில் இருந்து 100 லிட்டர் பால் திருடப்பட்டுள்ளதாக அறிகிறோம் . நேரு ஸ்டேடியம் , காந்திபுரம் ஆவின் பூத்துகளில் பெருமளவு பால் திருடப்பட்டுள்ளது. சிறிய அளவு பூத்துகளில் பெரிய பாதுகாப்பு வசதி இல்லை. அதனை அறிந்த சிலர் இது போன்று செய்துள்ளனர். நாங்கள் காவல் நிலையத்தில் புகார் அளிக்க உள்ளோம். ஆனாலும் , விஜய் போன்ற முன்னணி நடிகர்கள் இதில் தலையீட்டு தங்களது ரசிகர்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும் ”
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Post a Comment