15 வருடங்களுக்கு பிறகு மீண்டும் திரையிடப்படும் அஜித் படம் – ரசிகர்கள் ஆர்பரிப்பு
15 வருடங்களுக்கு பிறகு மீண்டும் திரையிடப்படும் அஜித் படம் – ரசிகர்கள் ஆர்பரிப்பு

அஜித்தின் ரசிகர்கள் பலம் அனைவரும் அறிந்ததே. ஆனால், இவருக்கு தமிழகத்தில் மட்டும் தான் இதுநாள் வரை மாஸ் ரசிகர்கள் கூட்டம் இருந்தது.
சில வருடங்களாக தான் கேரளாவில் இவருடைய படம் நல்ல வரவேற்பு பெற்று வருகின்றது. கடந்த வருடம் வெளிவந்த என்னை அறிந்தால், வேதாளம் ஆகிய இரண்டு படங்களும் கேரளாவில் நல்ல வசூல் செய்தது.
இதனால் இவருக்கு என ஒரு கணிசமான ரசிகர்கள் கூட்டம் கேரளாவில் உருவாக தற்போது மே 1ம் தேதி இவருடைய பிறந்தநாளை முன்னிட்டு திருவனந்தபுரத்தில் ஒரு பிரபல திரையரங்கில் தீனா படத்தின் ஸ்பெஷல் ஷோ திரையிடவுள்ளார்களாம். தீனா திரைப்படம் வெளியாகி கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கு பிறகு மீண்டும் திரையிடப்படுவது குறிப்பிடத்தக்கது.
இதுநாள் வரை விஜய்க்கு மட்டுமே இதுப்போல் தீவிர ரசிகர்கள் கேரளாவில் இருந்து வந்தது இருப்பினும், விஜய் பிறந்தநாள் அன்று ஒருமுறை கூட அவரது படங்களை திரயிடதில்லை என்பது குறிப்பிடத்தக்கது
Post a Comment