ஆண்ட்ராய்டு மொபைலில் குறைபாடுகள் உள்ளதா? அறிந்துகொள்ள உதவும் செயலி
அல்லது உங்கள் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் குறைபாடுகள் உள்ளதா? என அறிந்து கொள்ள விரும்புகிறீர்களா?
செயலிகளின் துணையின்றி சில குறியீடுகளை பயன்படுத்தி ஸ்மார்ட்போனில் உள்ள குறைபாடுகளை கண்டறிவதற்கான வசதி சில நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்களில் இருந்தாலும் கூட அனைத்து ஸ்மார்ட்போன்களிலும் அவ்வாறான வசதிகள் இல்லை
ஸ்மார்ட்போனில் உள்ள குறைபாடுகளை அறிய உதவும் செயலி
எனவே Test Your Android செயலியை பயன்படுத்தி எந்த ஒரு ஸ்மார்ட்போன் தொடர்பிலும் சோதித்து அறிந்துகொள்ள முடியும்.பதிவில் வழங்கப்பட்டுள்ள இணைப்பு மூலம் இதனை தரவிறக்கி உங்கள் ஸ்மார்ட்போனில் நிறுவிக்கொள்ளலாம்.
பின்னர் குறிப்பிட்ட செயலியின் மூலம் அந்த ஸ்மார்ட்போனின் திரை, ஒலி, வைப்ரேஷன், கேமரா, ஃப்ளாஷ் லைட், வை-பை, ஜி.பி.எஸ் மற்றும் ஏனைய உணரிகள் (Sensor) தொடர்பான அத்தனை அம்சங்களையும் சோதித்து அறிந்துகொள்ளலாம்.
அது மாத்திரம் இன்றி இந்த செயலியின் மேல் மத்திய பகுதியில் வழங்கப்பட்டுள்ள Information எனும் பகுதி மூலம் ஸ்மார்ட்போனில் நிறுவப்பட்டுள்ள இயங்குதளம் தொடர்பான விபரம், கேமராவின் திறன், அதில் உள்ள வசதிகள், பேட்டரியின் திறன் போன்றவைகள் உட்பட இன்னும் பலவற்றையும் அறிந்துகொள்ள முடியும்.
Post a Comment