தெறி படத்திற்கு தடை – காவல்துறையில் புகார் மனு
வருஷா வருஷம் தீபாவளி பொங்கல் வருவது போல, விஜய் படம் ரிலீஸ் என்றால் கூடவே பிரச்சனையும் வரும் என்பது சகஜமாகிவிட்ட நிலையில், சமீபத்தில் மக்கள் விடுதலை கழகம் அமைப்பினர் இந்த படத்தை தடை செய்ய வேண்டும் என போலிஸில் புகார் கொடுத்துள்ளனர்.
(இதனை படித்துகொண்டிருக்கும் போதே ,க.க.போ படத்தில் விஜய் சேதுபதி “டேய்.! நீங்க எல்லாம் எங்கிருந்துடா வறிங்க..? என்பது போல் நீங்கள் நினைப்பது எங்களுக்கு கேட்கிறது)
என்ன என்று விசாரிக்கையில் கத்தி படம் தாகபூமிகுறும்படத்திலிருந்து திருடப்பட்டது, இதற்கு நியாயமான தீர்ப்பு தாகபூமி இயக்குனருக்கு கிடைக்க வேண்டும், இல்லையெனில் விஜய், முருகதாஸ் படங்களை தடை செய்ய வேண்டும் என புகார் கொடுத்துள்ளனர்.
இதுவரை, பிரச்சனையில் சிக்கி வெளிவந்த விஜய் படங்கள் அதிரி புதிரி ஹிட் அடித்துள்ளன. அதே போல இந்தப்படமும் மாபெரும் வெற்றியை பெரும் என்று விஜய் ரசிகர்கள் கருத்து “தெறி”வித்து வருகின்றனர்.
Post a Comment