உதயமாகிறது புதிய நடிகர் சங்கம் – பரபரப்பில் கோலிவுட் – New “Nadigar Sangam” to be Established Soon
சமீபத்தில் நடைபெற்ற நடிகர் சங்க தேர்தலில் நாசர் தலைமையிலான அணி வெற்றி பெற்று திறமையுடனும் ஒற்றுமையுடனும் நிர்வாகம் நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில் நடிகர் சங்கம் இரண்டாக உடைய போவதாகவும், ‘தமிழ் நடிகர் சங்கம்’ என புதிய பெயரில் புதிய சங்கம் ஒன்று உருவாகவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த புதிய சங்கத்தில் தற்போதைய நிர்வாகிகளுடன் கருத்துவேறுபாட்டுடன் இருக்கும் சரத்குமார், அஜித், சிம்பு, ராதாரவி, ராதிகா உள்பட பலர் இணையவுள்ளதாகவும் பரபரப்புடன் செய்தி வெளிவந்துள்ளது.
இந்த தகவல் தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. புதிய நடிகர் சங்கத்தில் யார் யார்? இணைவார்கள் என்பது போக போக தெரியும் என கூறப்படுகிறது.
Post a Comment