Header Ads

எந்தவொரு தொலைபேசியின் ஐஎம்இஐ நம்பரையும் கண்டுப்பிடிப்பது எப்படி.?

நீங்கள் உங்கள் தொலைபேசியை பதிவு செய்யும் போதுதோ அல்லது ஆன்லைனில் ஒரு பழைய விற்க முயற்சிக்கும் போதோ உங்கள் கருவியின் ஐஎம்இஐ எண் கேட்கப்படும். ஒருவேளை உங்களின் ஐஎம்இஐ எண் உங்கள் நினைவில் இல்லை அல்லது எப்படி கண்டறிவது என்பது தெரியவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். உங்களுக்கு எளிய வழிமுறைகளை கொண்ட டூடோரியலை வழங்கி தமிழ் கிஸ்பாட் உதவ காத்திருக்கிறது.

சாதாரணமான தேவைகளுக்கு மட்டுமின்றி அவசர சூழ்நிலைகளிலும் முக்கியமான ஒரு எண்ணாக இந்த ஐஎம்இஐ-தனை பயன்படுத்த முடியும். சரி, உங்கள் தொலைபேசியின் ஐஎம்இஐ (IMEI) நம்பரை கண்டுபிடிப்பது எப்படி.?
உங்களிடம் உங்கள் தொலைபேசி இருப்பின்..
யூஎஸ்எஸ்டி கோட் பயன்படுத்தி கண்டறிவது எப்படி.?

1. உங்கள் தொலைபேசியில் இருந்த்து *#06# என்ற எண்ணிற்கு டயல் செய்யவும்.
2. இப்போது உங்களின் ஐஎம்இஐ திரையில் காட்டப்படும். நீங்கள் எங்காவது பாதுகாப்பாக அதை எழுதிவைத்துக் கொள்ளவும் அல்லது அடிக்கடி பயன்படுத்தும் வண்ணம் ஒரு ஸ்க்ரீன் ஷார்ட் எடுத்து வைத்துக்கொள்ளவும்.

ஐபோன்களில் கண்டறிவது எப்படி.?

நீங்கள் ஒரு ஐபோன் 5 அல்லது அதற்கு அடுத்த புதிய ஐபோன் வைத்திருந்தால் அதன் பேக் பேனலில் ஐஎம்இஐ எண் பொறிக்கப்பட்டுள்ளதை காணலாம். ஐபோன் 4எஸ் அல்லது அதற்க்கும் பழைய ஐபோன்கள் கொண்டிருந்தால் ஐஎம்இஐ எண் ஆனது சிம் தட்டில் அச்சிடப்பட்டு இருக்கும்
செட்டிங்ஸ் வழியாக கண்டறிவது எப்படி.?

ஆண்ட்ராய்டு கருவியாக இருப்பின், செட்டிங்ஸ் > அபௌட் > ஐஎம்இஐ எண் பார்க்கவும். ஸ்டேட்டஸ் டாப் செய்து கீழே ஸ்க்ரோல் செய்ய ஐஎம்இஐ தகவல்களை பார்க்கலாம்.
ஐபோன் கருவியாக இருப்பின், செட்டிங்ஸ் > ஜெனரல் > அபௌட் உள்நுழைந்து பின்னர் ஐஎம்இஐ எண்ணை அறிய கீழ்பக்கமாக ஸ்க்ரோல் செய்யவும்.
சில்லறை பெட்டியில் அல்லது பில் மூலம் கண்டறிவது எப்படி.?

நீங்கள் கருவிகளை வாங்கும் சில்லறை பெட்டியில் மற்றும் அதன் பில் ஆகிய இரண்டிலுமே ஐஎம்இஐ எண் எழுதப்பட்டிருக்கும். ஆக கருவிகள் வாங்கிய புதிதில் சில்லறை பெட்டி மற்றும் அதன் பில் ஆகியவைகளை பாதுக்காப்பாக வைக்கவும்.
தொலைந்து போன ஆண்ட்ராய்டு கருவியில் கண்டறிவது எப்படி.?

1. தொலைந்த கருவியில் இணைக்கப்பட்டிருக்கும் கூகுள் அக்கவுண்ட்டை லாக்-இன் செய்து கோகுல் டேஷ் போர்ட்டுக்குள் நுழையவும்
2. பச்சை ரோபோ லோகோவில் இருக்கும் ஆண்ட்ராய்டு என்பதை கிளிக் செய்யவும்.
3. பின்னர் ஐஎம்இஐ எண்கள் உட்பட பதிவு செய்யப்பட்ட சாதனங்களின் ஒரு பட்டியலில் உங்களுக்கு வழங்கப்படும்.

No comments

Powered by Blogger.