Header Ads

தமிழர்களை முட்டாளாக்கிய விஜய் டிவி…! – பின்னணி பாடகரை போட்டியாளராக்கி 70 லட்சம் மோசடி….

511
விஜய் டிவியின் ஒவ்வொரு நிகழ்ச்சியும் மக்களால் பெரிதும் விரும்பப்படுபவை.
அதிலும் ‘சூப்பர் சிங்கர்’ என்ற நிகழ்ச்சியை பார்க்காதவர்கள் மிகவும் குறைவாகவே இருப்பர்.
குறிப்பாக, இசை மீது நாட்டம் உள்ள அனைவரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தொடர்ந்து பார்த்து வருகின்றனர்.
தமிழக மக்கள் மட்டுமின்றி, உலகம் முழுக்க உள்ள தமிழ்மக்களின் அபரிமிதமான வரவேற்பைப் பெற்ற ‘சூப்பர் சிங்கர்’ நிகழ்ச்சியின் சீசன் 5 கடந்த வாரம் நிறைவுற்றது.
சென்னையைச் சேர்ந்த ராஜ கணபதி, பாண்டிச்சேரியைச் சேர்ந்த ஃபரீதா, கேரளாவைச் சேர்ந்த லட்சுமி பிரதீப், ஆனந்த் அரவிந்தக்ஷன், சியாத் ஆகிய ஐந்து பேர் இறுதிப்போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர்.
இந்தப்போட்டியில் வெற்றி பெறுகிற போட்டியாளருக்கு அருண்எக்ஸல்லோ என்ற கட்டுமான நிறுவனம் சென்னைக்கு அருகில் உள்ள ஒரகடத்தில் 70 லட்சம் மதிப்புள்ள வீடு ஒன்றை பரிசாக வழங்குகிறது.
அதன்படி, ‘சூப்பர் சிங்கர் சீசன் 5’ இறுதிப்போட்டியில் ஆனந்த் அரவிந்தக்ஷன் வெற்றி பெற்று 70 லட்சம் மதிப்புள்ள வீட்டைப் பரிசாக வென்றார்.
ஃபரீதா இரண்டாம் இடம் பிடித்து 10 லட்சம் பரிசு பெற்றார்.
ராஜகணபதி மூன்றாம் இடம் பிடித்தார்.
லட்சுமிக்கு நான்காவது இடம்.
சியாத்துக்கு ஐந்தாவது இடம்.
‘சூப்பர் சிங்கர் சீசன் 5’ போட்டியை தொடக்கத்தில் இருந்து பார்த்து வருபவர்களுக்கு, ஆனந்த் அரவிந்தக்ஷனுக்கு முதல் பரிசு வழங்கியது மிகப்பெரிய அதிர்ச்சியைக் கொடுத்தது.
காரணம்… முதல் பரிசுக்கு தகுதியானவர் உண்மையிலேயே ஃபரீதாதான்.
‘சூப்பர் சிங்கர் சீசன் 5’ போட்டியை தொடக்கம் முதல் பார்த்து வருபவர்களின் எதிர்பார்ப்பும் இப்படித்தான் இருந்தது.
ஒருவேளை ஃபரீதாவுக்கு முதல் பரிசு கிடைக்கவில்லை என்றால் சியாத் அல்லது ராஜ கணபதிக்கு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பும் பரவலாக இருந்தநிலையில், யாருமே எதிர்பாராதவிதமாக யூகப்பட்டியலில் கூட இல்லாத ஆனந்த் அரவிந்தக்ஷனுக்கு முதல் பரிசை அறிவித்து 70 லட்சம் மதிப்புள்ள வீட்டையும் வழங்கியது விஜய் டிவி.
‘சூப்பர் சிங்கர் சீசன் 5’ போட்டியில் பல தடவை எலிமினேட் செய்யப்பட்ட ஆனந்த் அரவிந்தக்ஷன், இறுதிப்போட்டிக்கும் கூட வைல்ட் கார்ட் என்கிற மறுவாய்ப்பு மூலம்தான் உள்ளே வந்தார்.
அவருக்கு முதல் பரிசு வழங்கியபோதே பல சந்தேகங்கள் எழுந்தன.
சூப்பர் சிங்கர் போட்டியில் நடுவர்களாக இருந்த சித்ரா உட்பட பலரும் கேரளாவைச் சேர்ந்தவர்கள்.
அதன் காரணமாக ஆனந்த் அரவிந்தக்ஷனுக்கு வழங்கப்பட்டிருக்கலாம் என்ற விமர்சனமும் காதில் விழுந்தது.
இந்நிலையில் ‘சூப்பர் சிங்கர் சீசன் 5’ நிகழ்ச்சியில் மிகப்பெரிய மோசடியும், கண்துடைப்பு நாடகமும் நடத்தப்பட்ட தகவல் தற்போது கிடைத்துள்ளது.
அதாவது, ‘சூப்பர் சிங்கர் சீசன் 5’ இறுதிப்போட்டியில் ஆனந்த் அரவிந்தக்ஷனுக்கு முதல் பரிசு வழங்கப்பட்டதில் மிகப்பெரிய மோசடியும், முறைகேடும் நடைபெற்றுள்ளது அம்பலமாகி இருக்கிறது.
முதல் பரிசு பெற்ற ஆனந்த் அரவிந்தக்ஷன் ஏற்கெனவே பல திரைப்படங்களில் 10க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியவர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
supersingerஆரோகணம், நீர்ப்பறவை, பாண்டியநாடு, 10 எண்றதுக்குள்ள, இவன் வேற மாதிரி, காடு, ஒன்பதுல குரு, மதயானைக் கூட்டம் உட்பட பல படங்களில் பாடியிருக்கிறார்.
இவற்றில் ஆரோகணம், நீர்ப்பறவை ஆகிய படங்கள் 2012 ஆம் ஆண்டில் வெளியான படங்கள்.
காடு, ஒன்பதுல குரு, இவன் வேற மாதிரி, மத யானைக் கூட்டம், பாண்டியநாடு ஆகிய படங்களும் கூட ‘சூப்பர் சிங்கர் சீசன் 5’ போட்டி தொடங்கப்பட்டதற்கு முன்னரே வெளியான படங்கள்.
ஆக, பல படங்களில் பின்னணி பாடியுள்ளதை மறைத்து ‘சூப்பர் சிங்கர் சீசன் 5’ போட்டியில் கலந்து கொண்டிருக்கிறார் ஆனந்த் அரவிந்தக்ஷன்.
இதில் உச்சகட்ட காமெடி அல்லது கொடுமை என்ன தெரியுமா?
10 எண்றதுக்குள்ள, பாண்டியநாடு படங்களில் ஆனந்த் அரவிந்தக்ஷனுக்கு பாட வாய்ப்பு கொடுத்த இசையமைப்பாளர் இமான், ‘சூப்பர் சிங்கர் சீசன் 5’ போட்டிக்கு சிறப்பு விருந்தினராக வந்தார்.
அப்போது, இமானும் கூட தன்னுடைய இசையமைப்பில் ஆனந்த் அரவிந்தக்ஷன் ஏற்கனவே பாடியிருக்கிறார் என்ற உண்மையை சொல்லாமல் மறைத்ததுதான்.
ஆனந்த் அரவிந்தக்ஷன் ஏற்கனவே பல படங்களில் பாடியிருக்கிறார் என்ற உண்மை விஜய் டிவிக்கு தெரியாமல் இருக்குமா?
நிச்சயம் தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை.
தெரிந்தே இப்படியொரு மோசடியில் விஜய் டிவி ஈடுபட்டது ஏன்?
supersinger1விஜய் டிவி செய்த இந்த மோசடி விவகாரம் வெளியே தெரிந்ததும், சமூக வலைத்தளங்களில் இது குறித்து பலரும் தங்களது கண்டனங்களைப் பதிவு செய்து வருகிறார்கள்.
ஏற்கெனவே பல பாடல்களைப் பாடிய ஒரு பின்னணிப் பாடகரை சூப்பர் சிங்கர் போட்டியில் கலந்து கொள்ள வைத்ததே முதல் அயோக்கியத்தனம்.
அதன் பின், சரியாகப் பாடவில்லை என்று காரணம் சொல்லி அவரை போட்டியிலிருந்து நீக்கிவிட்டு, மீண்டும் ‘வைல்ட் கார்டு’ மூலம் அவரை உள்ளே வரவைத்து, இறுதிப் போட்டியில் வெற்றி பெறவும் செய்தது திட்டமிட்டு செய்யப்பட்ட அயோக்கியத்தனம்.
விஜய் டிவி இப்படி ஒரு மோசடியை செய்து ரசிகர்களை மட்டும் ஏமாற்றவில்லை, 70 லட்சம் மதிப்புள்ள வீட்டை இலவசமாக வழங்கிய அருண் எக்ஸல்லோ நிறுவனத்தையும் சேர்த்தே ஏமாற்றி இருக்கிறது.
இதற்கிடையில், வேலைவெட்டியில்லாமல் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியைப்பார்த்த அப்பாவி பொதுமக்கள் பலரும், ஆனந்த் அரவிந்தக்ஷன் மிகப்பெரிய மோசடியைச் செய்திருப்பதால், அவரை தகுதி நீக்கம் செய்துவிட்டு, உண்மையான திறமைசாலியான (இரண்டாவது பரிசை வென்ற) ஃபரீதாவுக்கு முதல் பரிசைக் கொடுக்க வேண்டும் என்றும், தமிழக மக்களை ஏமாற்றிய ஆனந்த் அரவிந்தக்ஷனும், விஜய் டிவியும் தமிழக மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள்.
இந்த மோசடிக்கு விஜய் டிவி என்ன விளக்கம் சொல்லப்போகிறது?

No comments

Powered by Blogger.