Header Ads

உங்களை பற்றிய அழகான அறிமுகம்! பேஸ்புக்கின் மற்றுமொரு புதிய வசதி

நம்மை பற்றி அறிமுகம் செய்துகொள்வதற்காக சுமார் 7 வினாடி வீடியோவை பேஸ்புக் அறிமுகப்படுத்துகிறது.

பேஸ்புக் பயன்பாட்டாளர்களுக்கு எளிமையான, இனிமையான அனுபவத்தை ஏற்படுத்தும் விதமாக ‘அபவுட்’ (குறிப்பு) பகுதியில் சில மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது.

அதிகம் பேர் ரசித்த முந்தைய சுயவிவர படங்களை, புதிய படத்துக்கு மேலேயே இணைத்து பின் செய்யும் வசதியையும் இத்துடன் கொண்டுவந்துள்ளது.

நம்மைப் பற்றிய சுய விவரக் குறிப்பில் (பயோ) 100 எழுத்துக்களைச் சேர்க்கவும், மொபைல் போனுக்கு ஏற்றவாறு, சுயவிவரப் படத்தை பக்கத்தின் நடுவில் வைக்கும் வசதியும் அறிமுகமாக உள்ளது.

அத்துடன், புகைப்படங்களை வைக்கும் பகுதியை அதிகரித்துள்ளனர்.

தமது தற்போதைய வாழ்க்கையில், என்ன நடக்கிறது? எது தனக்கு முக்கியம்? என்பவற்றை இன்னும் அழகாக உலகுக்குச் சொல்லும் விதமாக இவ்வாறு வடிவமைத்திருப்பதாக இந்த திட்டத்துக்கு மேலாளரான எய்ஜிரிம் ஷோர்மேன் தெரிவித்துள்ளார்.

நன்றி : பிரபு
_________________________________________________________________________________

எமது சேவை மூலம் கணணி, இணையம், தொலைபேசி, புதிய கண்டுபிடிப்பு போன்ற தகவல்களை உடனுக்குடன் அறிந்துகொள்ள எமது முகநூல் பக்கத்தை LIKE செய்யுங்கள் 

No comments

Powered by Blogger.