இன்டர்நெட் இல்லாமல் வாட்ஸ் அப் ? வருகிறது புதிய சிம் !!!!!!!!!! ( How To Use Whatsapp Without Internet Connection )
தற்போது உள்ள காலகட்டத்தில் தகவல் தொடர்பில் வாட்ஸ்-ஆப்பின் பங்கு முக்கியமாக இருக்கிறது.
ஸ்மார்ட்போன்களின் பயன்பாடு அதிகரித்து வரும் அதே நிலையில், வாட்ஸ்-ஆப்பை பயன்பாடும் அதிகரித்துக் கொண்டே தான் வருகிறது.
இதை பயன்படுத்துவதற்கு இணையம் முக்கியமாக தேவைப்படுகிறது.
ஆனால் சில சமயங்களில் இணையம் இல்லாமல், இதை பயன்படுத்த முடிந்தால் எவ்வளவு சிறப்பாக இருக்கும் என்ற கேள்வி அனைவருக்கும் வந்திருக்கும்.
அதன்படி உலகம் முழுவதும் பிரபலமான இந்த வாட்ஸ்-ஆப்பை இணையம் இல்லாமலேயே பயன்படுத்தும் வகையில் புதிய சிம் தயாரிக்கப்பட்டுள்ளது.
இதை இத்தாலியை சேர்ந்த ஒரு மொபைல் நிறுவனம் உருவாக்கியுள்ளது.
இந்த அபூர்வ சிம்மை ‘ஜீரோமொபைல்’ நிறுவனத்தின் இயக்குனர் மானுவேல் ஜனிலியா கண்டுபிடித்திருக்கிறார்.
இந்த சிம்மை பயன்படுத்தி வை-ஃபை, டேட்டா கனெக்ஷன், ரோமிங் இல்லாமல் மெசேஜை அனுப்பலாம். இந்த சிம்மிற்கு ‘வாட்ஸிம்’ என பெயரிடப்பட்டுள்ளது.
‘வாட்ஸிம்’ உலகம் முழுவதிலுமுள்ள 150 நாடுகளில் 400-க்கும் மேற்பட்ட மொபைல் ஆபரேட்டர்களுடன் இணைந்து சேவையை வழங்குகிறது.
இதில் ஒருவேளை அருகில் ஏதாவது ஒரு நெட்வொர்க்கில் ‘சிக்னல்’ நன்றாக இருந்தால் தானாகவே அந்த நெட்வொர்க்கில் ‘கனெக்ட்’ ஆகிவிடும். இந்த சிம் அதிகம் பயணம் செய்பவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம்.
அதைவிட, அவர்கள் தங்களுக்கு அன்பானவர்களுடன் எந்த தடையும் இல்லாமல் ‘வாட்ஸ்-ஆப்’பில் எப்போதும் இணைந்திருக்க முடியும். இதற்கு எந்த ரோமிங் கட்டணங்களும் கிடையாது என்பது கூடுதல் வசதி.
இந்த சிம்மின் விலை வெளிநாட்டு பண மதிப்பில் 10 பவுண்டுகள் செலவாகும். அதாவது, இந்திய பண மதிப்பில் ரூ.714. ‘வாட்ஸிம்’முக்கு மாதாந்திர கட்டணங்களோ, பிக்ஸட் கட்டணங்களோ, எதுவும் கிடையாது. அதுமட்டுமல்ல இது ஒருபோதும் எக்ஸ்பைரி ஆகவே ஆகாது.
மெசேஜை போல மல்டிமீடியா கண்டென்ட்டுகளான போட்டோ, வீடியோ, ஆடியோ பைல்களை இலவசமாக இதில் அனுப்ப முடியாது.
அதற்கு தனியாக நாம் ரீசார்ஜ் செய்துதான் ஆக வேண்டும். எனினும், சில கிரெடிட் பாயிண்டுகளை கலெக்ட் செய்து கொண்டால் அதற்கு ஏற்றவாறு இலவசமாக அனுப்ப முடியும்.
அதே சமயம் கான்டாக்ட் மற்றும் லொகேஷன் ஷேரிங் செய்வதற்கு எந்த கட்டணமும் இல்லை. அதற்கு எந்தவித கிரெடிட்டுகளும் தேவையில்லை என்பது சிறந்த சேவையாக உள்ளது
Like the Post? Share with your Friends:-
Post a Comment