மாப்ள சிங்கம் -விமர்சனம்
தனக்கு பொருத்தமான கதைகளை தேர்வு செய்திருந்தால் சிவகார்த்திகேயன் இருக்கும் இடத்தில் இருந்திருக்க வேண்டியவர் விமல்.
அதை செய்யத்தவறியதால் இரண்டாம்நிலை ஹீரோவாகவே இருக்கும் விமலுக்கு, மாப்ள சிங்கம் ஓரளவு கை கொடுத்திருக்கிறது.
கதையில் புதுமை இல்லை, தமிழ்சினிமாவில் பார்த்து சலித்த கதைதான் என்றாலும் பொழுதை சந்தோஷமாக கழிக்க விரும்புகிறவர்களின் மனசைக் கவருவான் மாப்ள சிங்கம்.
‘மாப்ள சிங்கம்’ கதை என்ன?
திருவிழாவில் தேர் இழுப்பது தொடங்கி, சேர்மேன் பதவிக்கான தேர்தல் வரை ராதாரவி குடும்பத்தினருக்கும், ‘முனிஸ்காந்த்’ ராமதாஸ் குடும்பத்தினருக்கும் எல்லா விஷயங்களில் ஏழாம்பொருத்தம்.
இருவேறு துருவங்களாக முறுக்கிக் கொண்டிருக்கும் இரண்டு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் காதலித்தால் என்னாகும் என்பதுதான் மாப்ள சிங்கம் படத்தின் கதை.
பி.வாசு கையில் இந்தக் கதையைக் கொடுத்திருந்தால் டாடா சுமோக்களை பறக்கவிட்டு ரத்த ஆறு ஓட விட்டிருப்பார்.
எழிலின் உதவியாளரான புதுமுக இயக்குநர் ராஜசேகரோ மாப்ள சிங்கத்தை காமெடி ட்ரீட்மெண்ட்டில் நகைச்சுவைப்படமாக்கி இருக்கிறார்.
சேர்மேனாக இருக்கும் ராதாரவியின் தம்பி மகன் விமல்.
முனீஸ்காந்த் ராமதாஸின் முறைப்பெண் அஞ்சலி.
ராதாரவியின் மகள் மதுமிலா, அஞ்சலியின் அண்ணன் விஷ்ணுவை காதலிக்கிறார்.
விமல் – அஞ்சலியின் காதல் கை கூடி வரும் நேரத்தில் விஷ்ணுவும், மதுமிலாவும் ஊரைவிட்டு ஓடிவிட்டதாக தகவல் பரவ, இரண்டு குடும்பத்துக்கும் மோதல் முற்றுகிறது.
விமல், அஞ்சலி காதலிலும் விரிசல்.
இதற்கிடையில் ஊருக்குள் நடக்கும் உள்ளாட்சி தேர்தலில், தனக்கு பதிலாக விமலை தேர்தலில் நிற்க வைக்கிறார் ராதாரவி.
விமலை எதிர்த்து அஞ்சலியை நிற்க வைக்கிறார் ராமதாஸ்.
தேர்தலில் யாருக்கு வெற்றி?
விமல் – அஞ்சலி, விஷ்ணு – மதுமிலாவின் காதல் காதல் கை கூடியதா என்பது ‘மாப்ள சிங்கம்’ படத்தின் க்ளைமாக்ஸ்.
கிராமத்து படங்களுக்கே உரிய ஜாதி, கௌரவ பிரச்சனைகளை வைத்தே மாப்ள சிங்கம் படத்தின் கதையையும் எழுதி இருக்கிறார் ராஜசேகர்.
ஆனாலும் சுவாரஸ்யமான திரைக்கதையால் போரடிக்காமல் காட்சிகளை நகர்த்திச் சென்றிருக்கிறார்.
படம் முழுக்க சூரி, காளி வெங்கட், சாமிநாதன், ராமதாஸ், வெள்ளை பெயிண்ட் அடித்த வையாபுரியைப்போல் இருக்கும் அந்த வெள்ளைகார இளைஞர் என காமெடியன்கள் நிறைந்திருப்பதால் கலகலப்புக்கு பஞ்சமே இல்லை.
ஒரு கிராமத்து இளைஞனை கண்முன் நிறுத்தி அலட்டல் இல்லாமல் நடித்திருக்கிறார் விமல்.
கொஞ்சம் சதைபோட்டாலும் அதே அஞ்சலி, அழகிலும், நடிப்பிலும்.
‘ஆஃபீஸ்’ தொடரின் விஷ்ணுவும், மதுமிலா மனதில் நிற்கிறார்கள்.
சூரி, காளிவெங்கட், சாமிநாதன் சிரிக்க வைத்திருக்கிறார்கள்.
மாப்ள சிங்கம் – வீரமானவன் அல்ல, ஜாலியானவன்!
___________________________________
~~~~ Advertisement ~~~~~
----------------------------------------------------------
*【நண்பர்களின் கவனத்திற்கு】*
*நண்பர்களே உஙகள் மொபைலை ஒவ்வொரு* *முறை 【Lock 】செய்து பின்பு【Unlock】செய்யும் போதும் பணம் சம்பாதிக்க* *வேண்டுமா இதோ* *அதற்கான எளிய வழி கீழ் காணும் லிங்கில் சென்று* *அதற்க்கு பயன்படும்* *அப்ப்ளிகேசன் ஐ* *டவுன்லோடு செய்து* *பயன்பெறுங்கள்அந்த பணத்தை உங்கள் மொபைலுக்கு ஈசி செய்து கொள்ளலாம்*
*டவுன்லோடு செய்து* *உங்கள் Number ஐ Register செய்த மறு நொடியே உங்களுக்கு ரூபாய்5 வந்துவிடும்....*
*100%உண்மை*
*Application Download Link 👇👇👇👇*
___________________________________________________________________
________________________________________________
இந்த அப்ப்ளிகேசன் பயன்படுத்தி பணம் சம்பாதிப்பது எப்படி என்பதை அறிய கீழ் காணும் லிங்கில் சென்று 【வீடியோ】 பார்த்து பயன்பெறுங்கள்....
📹விடியோ லிங்க்🔗🔗🔗🔗👇👇

Post a Comment