Facebookல ப்ரோஃபைல் படங்களுக்கு பதிலாக வீடியோ வைப்பது எப்படி?
Facebook Profile Add Now Video Clips
தொழில்நுட்பம் நாளுக்கு நாள் வளர்ந்துக்கொண்டுதான் உள்ளது. பேஸ்புக்ல நாம் விரும்பிய படங்களை ப்ரோபைல் படமாக வைத்து அழகு பார்த்தோம். பின்னர் கவர் போட்டோ வந்தது. அதிலும் நமக்கு பிடித்தது போல விதவிதமாக கவர் படங்களை வைத்து மகிழ்ந்தோம். இப்போது வீடியோவை ப்ரோபைல் படமாக வைக்க முடியும். இந்த புதிய வீடியோ ப்ரோபைல் வசதியை பேஸ்புக்ல சென்ற ஆண்டு செப்டம்பர் 30ஆம் தேதி அன்றே அறிவித்து இருந்தது. பேஸ்புக் நியூஸ்ரூம்லேயும் இதனை பற்றிய ஒரு வீடியோ இடம் பெற்றது. இப்ப கடந்த மார்ச் 22 2016 அன்று உலகம் முழுவதும் அனைவருக்கும் இந்த வசதியை பேஸ்புக் வழங்கி இருக்கிறது. எப்படி செட் செய்வது பார்க்கலாமா?
முதலில் உங்கள் மொபைல் கேமராவில்7 (வினாடிகள்) கொண்ட ஒரு வீடியோவை தயார் செய்யுங்கள். ஆம் அதிகம் சைஸ் உள்ள வீடியோவை லோட் செய்ய அதிக நேரம் ஆகும் என்பதால் பேஸ்புக் ஏழே வினாடிகள் மட்டுமே அனுமதி,
அடுத்து இங்கே கிளிக் செய்து Play Storeல உள்ள Facebook v69 டவுன்லோட் செய்யுங்கள் அல்லது இங்கே கிளிக் செய்து புதிய Facebook v71.0.0.0.20 பதிப்பை டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்யுங்கள்.
Please Share Ur Frds
அடுத்து Facebook App திறந்து உங்கள் பேஸ்புக் கணக்கில் லாகின் செய்யுங்கள். வழக்கம் போல ப்ரோஃபைல் படம் மாற்றும்போது இப்போது மேலே படத்தில் உள்ளது போல நான்கு ஆப்சன் வரும். ஏற்கனவே வீடியோ எடுத்து வைத்து இருந்தால் இரண்டாவதாக உள்ள Upload video or Photo டச் செய்து தயாரித்து வைத்த வீடியோவை தேர்வு செய்யுங்கள் அல்லது முதலில் உள்ள Take a New Profile Video டச் செய்து உங்களையோ அல்லது உங்கள் விருப்பத்திற்க்கு ஏற்றவாறு வீடியோ எடுங்கள். உங்கள் வீடியோ ஏழே வினாடிகள் மட்டுமே எடுத்துக்கொள்ளப்படும். முடிவாக Save செய்து உங்கள் ப்ரோஃபைல் படத்தை கிளிக் செய்து பார்த்தால் வீடியோ ஓடுவதை பார்க்கலாம்.
கவனத்தில் கொள்க: உங்கள் மொபைலில் பழைய பதிப்பு இருந்தால் வேலை செய்யாது. மேலே உள்ள லிங்க் கிளிக் செய்து அப்டேட் செய்ய மறவாதீர்கள். இப்போதைக்கு ஆண்ட்ராய்ட் மற்றும் ஐபோன் பேஸ்புக் ஆப்ஸ் மட்டுமே இந்த வசதி விரைவில் கணினியில் வீடியோ அப்லோட் செய்ய அனுமதிப்பார்கள்.
மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தாலும் கேளுங்கள்.
நண்பரே மறக்காமல் மேலே உள்ள SHARE பட்டன் மூலம் ஒரு ஷேர் செய்யுங்கள்
Thanks To Guru
Post a Comment