Header Ads

“இது நம்ம ஆளு” – விட்டுகொடுக்கும் பாண்டிராஜ்


Actor Simbu and Director Pandiraj in Idhu Namma Aalu Movie Stills
Actor Simbu and Director Pandiraj in Idhu Namma Aalu Movie

சிம்பு, நயன்தாரா, ஆன்ட்ரியா நடித்துள்ள ‘இது நம்ம ஆளு’ திரைப்படம் வெளியாவது இழுத்துக் கொண்டே போகிறது. அடுத்த மாதம் இப்படம் எப்படியும் வந்துவிடும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், அதற்குள் வேறு எந்த பிரச்சனையும் வந்துவிடக் கூடாது. இன்னும் சிலரோ படம் திட்டமிட்டபடி வருவது படத்தைத் தயாரித்துள்ள டி.ராஜேந்தர் கையில்தான் உள்ளது என்கிறார்கள்.
இந்தப் படத்தை முதல் பிரதி அடிப்படையில் தயாரிக்க ஆரம்பித்தவர் படத்தின் இயக்குனர் பாண்டிராஜ். அந்த விதத்தில் அவருக்கு இன்னும் 3 கோடி ரூபாய் வரை பாக்கி வைத்திருக்கிறாராம் டி.ராஜேந்தர். தனக்குத் தரவேண்டிய பணத்தைக் கொடுக்காமல் படத்தை வெளியிடக் கூடாது என பாண்டிராஜ் முடிவெடுத்திருந்தாராம். அந்த விஷயத்தைக் கேள்விப்பட்ட டி.ராஜேந்தர் உடனே தயாரிப்பாளர் சங்கம், இயக்குனர்கள் சங்கம் ஆகியவற்றை அணுகி ‘வாலு’ படத்தால் எனக்கு சுமார் 15 கோடி ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டுவிட்டது. பாண்டிராஜுக்குத் தரவேண்டிய பணத்தை ‘இது நம்ம ஆளு’ படத்தை வெளியிட்ட பிறகு கண்டிப்பாகத் தருகிறேன் என்று கோரிக்கை வைத்தாராம்.
சம்பந்தப்பட்ட சங்கத்தினர் டி.ராஜேந்தருக்காக பாண்டிராஜிடம் பேசியிருக்கிறார்கள். முதலில் இதற்கு சம்மதிக்காத பாண்டிராஜ், பின்னர் சரி என சம்மதம் சொல்லிவிட்டதாகத் தகவல். பாண்டிராஜ் மனது வைத்தால் மட்டுமே ‘இது நம்ம ஆளு’ படம் வெளிவரும் என்கிறார்கள்.
இதனிடையே தான் இல்லாமலேயே கடந்த வாரம் ஒரு பாடல் காட்சியை சிம்புவும், டிஆரும் எடுத்து முடித்ததால் கடும் கோபத்தில் இருக்கிறாராம் பாண்டிராஜ்.

No comments

Powered by Blogger.