புத்தம்புது வசதிகளுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள கூகுள் ட்ரான்ஸ்லேட் செயலி
【இந்த பதிவை படித்தபின் கண்டிப்பாக பகிறவும்】
அதுமட்டுமின்றி எனது பேஷ்புக் பக்கத்தை லைக் செய்யாதவர்கள் லைக் செய்து சேர் செய்யவும் நன்றி ~~~~~https://m.facebook.com/Prabu-Hi-Tech-News-893068217407160/~~~~~~~
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
நமக்குதெரியாத ஒரு மொழியில் அமைந்த சொல்லை நமக்குத் தெரிந்த மொழிக்கு மாற்றிக்கொள்ள அதிகமானவர்களால் பயன்படுத்தப்பட்டு வருவது கூகுள் மொழிபெயர்ப்பு சேவையாகும்.
இதனை நேரடியாக https://translate.google.comஎனும் இணையதளத்தின் ஊடாக பயன்படுத்திக் கொள்ள முடிவதுடன் ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்களுக்கு பிரத்தியோகமான செயலிகளும் உண்டு.
அந்தவகையில் ஆண்ட்ராய்டு, ஐபோன் சாதனங்களில் பயன்படுத்தக்கூடிய கூகுள் மொழிபெயர்ப்பு சேவையின் புதிய பதிப்பு தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளது.
இதன் புதிய பதிப்பில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள வசதிகள் நிச்சயம் உங்களுக்கு பயனுள்ளதாக அமையும். இதன் புதிய பதிப்பை கீலே வழங்கியுள்ள சுட்டி மூலம் தரவிரக்கிக் கொள்ளலாம்.
கூகுள் ட்ரான்ஸ்லேட் புதிய வசதிகள் என்ன?
- சொற்களை உடனுக்குடன் மொழிபெயர்க்கும் வசதி
ஆண்ட்ராய்டு சாதனங்களுக்கான புதிய பதிப்பில் Tap to translate எனும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த வசதி மூலம் உங்களால் பொருள் அறிய முடியாத சொற்களை எந்த ஒரு செயலியில் இருந்தவாறும் உடனுக்குடன் மொழிபெயர்துக் கொள்ள முடியும்.
அதாவது உங்களுக்கு தெரியாத ஒரு மொழியில் வாட்ஸ்அப், வைபர், பேஸ்புக் மெசெஞ்சர் மூலம் வந்திருக்கும் ஒரு தகவலையோ அல்லது இணையதளங்களில் உள்ள சொற்களையோ மொழி பெயர்த்துக்கொள்ள வேண்டும் எனின் நீங்கள் ஏற்கனவே பயன்படுத்திய செயலியில் இருந்து வெளியேற வேண்டிய அவசியம் இல்லை.
மாறாக பொருள் அறிய வேண்டிய சொல்லை Copy செய்யும் போது அதனை மொழி மாற்றிக்கொள்வதற்கான சிறியதொரு குறியீடு உங்கள் ஸ்மார்ட்போனில் தோன்றும் இனி அதனை சுட்டுவதன் மூலம் அந்த சொல்லை உங்களுக்கு தெரிந்த மொழிக்கு மாற்றிகொள்ளலாம்.
இவ்வாறு மொழிமாற்றப்படும் போது மொழிமாற்றப்படும் சொல்லை உங்களுக்குத் தெரிந்த மொழியில் பெற்றுக்கொள்ள கூகுள் ட்ரான்ஸ்லேட் செயலியின் செட்டிங்ஸ் பகுதியில் பின்வரும் மாற்றத்தை ஏற்படுத்திக்கொள்க.
Settings > Tap to Translate என்பதில் Enable Tap to Translateஎன்பதை Tick செய்த பின்னர் அதற்குக் கீழ் இருக்கும்Preferred languages எனும் பகுதில் உள்ள Your primary language என்பதில் உங்களுக்கு தெரிந்த மொழியையும்Language you translate most often என்பதில் Detect languageஎன்பதையும் தெரிவு செய்துகொள்க.
ஐபோன் கூகுள் ட்ரான்ஸ்லேட் செயலியின் புதிய வசதி
மேலும் இணைய இணைப்பு இல்லாத போது நமக்குத்தேவையான சொற்களை மொழிபெயர்த்துக் கொள்வதற்கான வசதி இது வரை ஆண்ட்ராய்டு சாதனங்களில் இருந்து வந்தது என்றாலும் இந்த வசதி ஐபோன் சாதனங்களில் இருக்கவில்லை.
எனவே ஐபோன் சாதனங்களுக்கான புதிய பதிப்பில் இணைய இணைப்பு இல்லாத போதும் சொற்களை மொழிமாற்றிக் கொள்வதற்கான வசதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த வசதி மூலம் அரபு, ஹிந்தி உட்பட 52 வரையான மொழிகள் வரை இணைய இணைப்பின்றி மொழிமாற்றிக் கொள்ள முடியும். இதில் தமிழ் மொழியும் உள்வாங்கப்பட வேண்டும் என்பது எனது அல்லவா...
Post a Comment