புகைப்படத்தில் இருப்பது என்ன? சந்தேகமா? பேஸ்புக் மெசெஞ்சர் மூலம் அறிந்துகொள்ளுங்கள்!
அண்மையில் பேஸ்புக் நிறுவனத்தின் பேஸ்புக் மெசெஞ்சர் சேவையில் பொட்ஸ் எனும் தானியங்கி முறைமை அறிமுகப்படுத்தப்பட்டதை அனைவரும் அறிந்திருப்பீர்கள்.
செயற்கை நுண்ணறிவுத் திறனை அடிப்படையாகக் கொண்டு பல பயனுள்ள வசதிகள் இதன் மூலம் உருவாக்கப்பட்டு வருகின்றன.
அந்தவகையில் பொட்ஸ் எனும் இந்த வசதியை பயன்படுத்தி பேஸ்புக் மெசெஞ்சர் மூலமே காலநிலை தொடர்பான தகவல்களை உடனுக்குடன் எவ்வாறு அறிந்துகொள்ளலாம் என்பதை எமது முன்னைய பதிவில் விளக்கியிருந்தோம்.
அதேபோல் WTFIT எனும் பொட்ஸ் வசதியை பயன்படுத்தி நீங்கள் அனுப்பும் புகைப்படங்களில் இருப்பது என்ன? என்பதை அறிந்துகொள்ள முடியும்.
இந்த வசதியை பெற்றுக்கொள்ள பேஸ்புக் மெசெஞ்சர் செயலியின் புதிய பதிப்பை நிறுவிக்கொள்க.
பின்னர் இந்த இணைப்பை சுட்டுவதன் மூலம் அதனை உங்கள் பேஸ்புக் மெசெஞ்சர் செயலியின் ஊடாக திறந்துகொள்க.
அவ்வளவுதான்!
சிறிது நேரத்தில் WTFIT பொட்ஸ் உங்கள் பேஸ்புக் மெசெஞ்சரில் இணைக்கப்பட்டுவிடும். இனி உங்களுக்குத் தேவையான புகைப்படங்களை WTFIT பொட்ஸ் இற்கு அனுப்புவதன் மூலம் அது என்ன என்பதை அறிந்துகொள்ளலாம்.
இதனை பின்வரும் வீடியோ மூலமும் அறியாலாம்.
இதனை பின்வரும் வீடியோ மூலமும் அறியாலாம்.
நீங்களும் கொஞ்சம் பயன்படுத்திப்பாருங்க! அப்டியே ஷாக் ஆயிடுவிங்க!
Post a Comment