2016-ஆம் ஆண்டில் ரூ.10,000/-க்குள் வெளியான டாப் 5 ஸ்மார்ட்போன்கள்.!
சியோமி ரெட்மீ 3எஸ் ப்ரைம் - விலைக்கு ஏற்ற வன்பொருள் கொண்ட ஒரு கருவியாகும். தரமான வன்பொருள், வேகமாக செயல்திறன், 13 மெகாபிக்சல் பின்புற கேமிரா மற்றும் 5 மெகாபிக்சல் முன்பக்க கேமிரா, குவால்காம் ஸ்னாப்டிராகன் 430 என்ற திறன் மிகுந்த செயலி, 3ஜிபி ரேம், 32 ஜிபி உள் சேமிப்பு,5 அங்குல டிஸ்ப்ளே, என இக்கருவி தரம் மிகுந்தது என்பதில் சந்தேகமே வேண்டாம்.
இந்தாண்டு மோட்டோ ஜி டர்போ சில குளிர்ச்சியான விலை வெட்டுக்களை கண்டிருக்கிறது. தற்போது ரூ.9,500/-கு இக்கருவி கிடைக்கும். அற்புதமான வன்பொருள்,0 ஸ்னாப்டிராகன் 615 திறன், 2ஜிபி ரேம், 16ஜிபி உள்ளடக்க சேமிப்பு, 720பி தீர்மானம், 5 அங்குல டிஸ்ப்ளே, சுத்தமான ஆண்ட்ராய்டு அனுபவம், 13 மெகாபிக்சல் கேமிரா என ஒரு கட்சிதமான கருவியாக இது திகழ்கிறது.
கே6 ஒரு பெரிய பேட்டரி, கைரேகை ஸ்கேனர், ஸ்னாப்டிராகன் 430, 3ஜிபி ரேம், 32 ஜிபி வரை உள் சேமிப்பு, பெரிய ஸ்க்ரீன், எச்டி (1080) தீர்மானம், 13 மெகாபிக்சல் செல்பீ கேமிரா என அனைத்து அம்சங்களும் கொண்ட ஒரு அற்புதமான பட்ஜெட் கருவியாக திகழ்கிறது.
ரெட்மீ நோட் 3, ஒரு வேகமாக மற்றும் வலிமையான வன்பொருள் கொண்ட ஒரு கருவியாகும். க்வால்காம் ஸ்னாப்டிராகன் 650 செயலி, ஒரு பெரிய மற்றும் சிறந்த திரை, அழகான கேமரா செயல்திறன் ஆகியவைகளை கொண்டிருந்தாலும் ரூ.9,999/- என்ற ஒரு அருமையான விலையில் கிடைக்கும் ஒரு நல்ல ஸ்மார்ட்போனாக இது திகழ்கிறது.
யூரேக்கா பிளஸ் கருவிதான் க்வால்காம் ஸ்னாப்டிராகன் 615 செயலி பயன்படுத்தும் ஒருமலிவான ஸ்மார்ட்போன் ஆகும். ரூ.6,500/-க்கு கிடைக்கும் இக்கருவியை தீவிர வேகமாக செயலி, எச்டி தீர்மானம் கொண்ட ஒரு 5.5 அங்குல டிஸ்ப்ளே, 2ஜிபி ரேம், 16ஜிபி உள்ளக சேமிப்பு, 13 மெகாபிக்சல் பின்புற கேமிரா ஆகியவைகளுடன் நல்ல திறன் மிக்க வன்பொருளும் அடக்கம்.
Post a Comment