HOW TO PROTECT SMARTPHONES FROM HACKERS IN TWO MINUTES
உங்கள் மொபைல் போனில் வலுவான பாஸ்வேர்டு வைத்து கொள்ளுங்கள். பாஸ்வேர்டு பயன்படுத்தாமல் நம்முடைய போன் பாதுகாப்பாக இருக்கும் என்று முட்டாள்கள் மட்டுமே எண்ணுவார்கள். உங்களுடைய போனை மிகப்பெரிய அளவில் பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிப்பது வலுவான பாஸ்வேர்டுதான் என்பதை அனைவரும் ஞாபகம் வைத்து கொள்ளவும்
உங்கள் போன் மறைகுறியாக்கப்பட்டதா? என்பதை செக் செய்யுங்கள். Encryted என்று கூறப்படும் இந்த பாதுகாப்பு அம்சம் என்பது டேட்டாவை ஓப்பன் செய்யும் முன் செய்ய வேண்டிய ஒரு பாதுகாப்பு வழியாகும். ஐபோன்கள் மற்றும் தற்போதைய லேட்டஸ்ட் ஆண்ட்ராய்டு போன்களில் இந்த வசதி உள்ளது. ஆனால் பழைய மாடல் ஆண்ட்ராய்டு போன்களில் நாம் தான் இந்த வசதியை ஏற்படுத்தி கொள்ள வேண்டும்
உங்களுடைய மொபைல் போன் ஆண்ட்ராய்டாக இருந்தாலும் சரி, ஐபோனாகவும் இருந்தாலும் சரி, அதில் உள்ள சாப்ட்வேர்களை கண்டிப்பாக அவ்வப்போது அப்டேட் செய்ய வேண்டும். ஆட்டோமெட்டிக் அப்டேட் என்றால் இன்னும் வசதியாக இருக்கும். அப்டேட் செய்யப்பட்ட மொபைல் போன்களை ஹேக்கிங் செய்வது ஹேக்கர்களுக்கு ஒரு சவாலான விஷயம் என்பது குறிப்பிடத்தக்கது
- டிவைஸ் ஃபைண்டர் என்பது உங்கள் மொபைல் போனின் பாதுகாப்பு அம்சங்களில் மேலும் ஒருவகை ஆகும். உங்களுடைய போனை கண்டுபிடிக்க முடியாத நிலையில் இந்த டிவைஸ் ஃபைண்டர் உங்களுக்கு உதவி செய்யும்.
Post a Comment