டி.வி. பார்க்கும் கருணாநிதி புகைப்படத்தை வெளியிட்டது காவேரி மருத்துவமனை
திமுக தலைவர் கருணாநிதியின் புகைப்படத்தை காவேரி மருத்துவமனை இன்று வெளியிட்டுள்ளது.
உடல் நலக்குறைவால் திமுக தலைவர் கருணாநிதி, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அவரை சந்தித்த தலைவர்கள் தெரிவித்தனர்.
இந்த நிலையில், கருணாநிதியின் புகைப்படத்தை காவேரி மருத்துவமனை நிர்வாகம் இன்று வெளியிட்டுள்ளது. அதில், கருணாநிதி, மருத்துவர்களுடன் டி.வி பார்ப்பது போல் புகைப்படம் உள்ளது.
கருணாநிதியின் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளதால் திமுகவினர் உற்சாகம் அடைந்துள்ளனர். இதனிடையே, கருணாநிதி வரும் வெள்ளிக்கிழமை வீடு திரும்புவார் என்று கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Post a Comment