Header Ads

பேட்டரி பேக்கப் நீண்ட நேரம் தாங்கணுமா... இதை செய்து பாருங்க...

நியூயார்க்:நிக்கலையே... நிக்கலையே... என்று ஸ்மார்ட்போன் வைத்திருப்பவர் புலம்புவது பேட்டரி பேக்கப்பிற்காகதான்... இதை சரி செய்ய நிபுணர்கள் சில ஐடியாக்கள் கொடுத்துள்ளனர். என்ன ஐடியா தெரியுங்களா?

ஸ்மார்ட்போன்களில் அதிகளவு பேட்டரி வழங்கப்பட்டாலும் பேக்கப் என்னவோ ஒரு நாள் மட்டுமே கிடைக்கிறது. ஸ்மார்ட்போன்களில் சில வழிமுறைகளை பின்பற்றினால் பேட்டரி பேக்கப் நேரத்தை சற்றே கூடுதலாக பெற முடியும். அப்படியாக பேட்டரி பேக்கப் நேரத்தை நீட்டிக்க என்ன செய்ய வேண்டும் என்பதை பாருங்கள்..

எந்நேரமும் அனைத்து செயலிகளையும் ஓப்பன் செய்து வைத்தால், பேட்டரி சீக்கிரம் தீர்ந்து போகும். இதனால் பயன்படுத்தாத செயலிகளை அவ்வப்போது மூடி விடவேண்டும்.


ஸ்மார்ட்போன் திரையின் பிரைட்னஸ் அளவினை அதிகமாக வைத்திருந்தால், பேட்டரியின் முழு சக்தியும் சீக்கிரம் காலியாகி உங்களை கவுத்துவிடும். இதனால் வெளிப்புற வெளிச்சத்திற்கு ஏற்ப பிரைட்னஸ் அளவு வைப்பது மற்றும் ஆட்டோ பிரைட்னஸ் மோடு ஆகியவற்றை செட் செய்து கொள்ளலாம்.

வைபை, ப்ளூடூத் மற்றும் ஜிபிஸ் போன்ற சேவைகளை பயன்படுத்தாத சமயத்தில் ஆப் செய்து வைக்க வேண்டும். இதனால் பேட்டரி பேக்கப் நேரம் வழக்கத்தை விட அதிகமாக கிடைக்கும்.

நீங்கள் பயன்படுத்தும் செயலிகளுக்கான சின்க் ஆப்ஷனை ஆப் செய்து வைக்கும் போதும் பேட்டரி பேக்கப் நேரம் அதிகரிக்கும்.

உயர் ரக கேம்களை விளையாடாமல் இருந்தால் பேட்டரி பேக்கப் அதிக நேரம் கிடைக்கும். சரி இதெல்லாம் செய்வீர்களா? செய்தால் பேட்டரி பேக்கப் அதிக நேரம் இருக்கும்.

No comments

Powered by Blogger.