கமல் உட்பட அத்தனை ஹீரோக்களையும் பின்னுக்குத்தள்ளி முன்னேறியுள்ள அஜித்
கமல் உட்பட அத்தனை ஹீரோக்களையும் பின்னுக்குத்தள்ளி முன்னேறியுள்ள அஜித்

அவர் கேட்ட சம்பளம், அஜித்தின் சம்பளம், படத்தின் பட்ஜெட்டை எல்லாம் கூட்டிக்கழித்துப் பார்த்துவிட்டு, கடைசியில் இந்த புராஜக்ட்டில் நிச்சயமாக லாபம் வராது என்பதால் பிவிபி, விஜயா புரடக்ஷன்ஸ், ஏ.ஜி.எஸ். ஆகிய மூன்று நிறுவனங்களுமே ஒதுங்கிக் கொண்டன. இப்படியான சூழலில்தான் சத்யஜோதி ஃபிலிம்ஸ் அஜித்தை வைத்து படம் தயாரிக்க முன் வந்தது. சிக்கனமாக படம் எடுத்து பழக்கப்பட்ட சத்யஜோதி ஃபிலிம்ஸ் தன்னுடைய படத்தைத் தயாரிக்க முடியுமா? என்று ஆரம்பத்தில் தயங்கி இருக்கிறார் அஜித்.
ஜாஸ் சினிமா நிறுவனத்தின் பைனான்ஸில் தயாரிப்பதால் பணம் பற்றி பிரச்சனை இல்லை, எவ்வளவு பெரிய பட்ஜெட் என்றாலும் தயாராக இருப்பதாக க்ரீன் சிக்னல் காட்டப்பட்டதும் சத்யஜோதி பிலிம்ஸ் படத்தில் நடிக்க சம்மதம் சொல்லி இருக்கிறார் அஜித்.
இந்தப் படத்தில் அஜித்துக்கு 35 கோடி சம்பளம். 35 கோடிக்கான சர்வீஸ் டாக்ஸ் 4 கோடியையும் தயாரிப்பு நிறுவனம் செலுத்த வேண்டும் என்ற அஜித்தின் கோரிக்கையையும் ஒப்புக்கொண்டுவிட்டனர். ஏறக்குறைய 39 கோடி சம்பளம் வாங்கியதன் மூலம் கமல் உட்பட அத்தனை ஹீரோக்களையும் பின்னுக்குத்தள்ளி முன்னேறியுள்ளார் அஜித்.
Post a Comment