உங்களின் தற்போதைய நம்பரை ஜியோவிற்கு போர்ட் செய்வது எப்படி.?
முதலில் 1900 என்ற எண்ணிற்கு 'PORT Mobile Numbe' (போர்ட் மொபைல் நம்பர்) என்று ஒரு எஸ்எம்எஸ் அனுப்பவும். நீங்கள் எஸ்எம்எஸ் அனுப்ப பயன்படுத்திய எண் தான் ரிலையன்ஸ் ஜியோவிற்கு போர்ட் செய்ய நீங்கள் விரும்பும் எண் என்பதை உறுதி செய்துகொள்ளுங்கள். இந்த எஸ்எம்எஸ் உங்களின் தற்போதைய சேவை வழங்குநரிடம் இருந்து வெளியேற விரும்பும் உங்கள் கோரிக்கைக்கு பதிலளிக்கும் (உங்கள் தற்போதைய சேவை வழங்குனரின்படி எஸ்எம்எஸ் கட்டணம் வசூலிக்கப்படலாம்)
நீங்கள் ஒரு யூனிக் போர்ட் கோட் (யூ.பி.சி) கொண்ட ஒரு எஸ்எம்எஸ்-தனை பெறுவீர்கள். இந்த யூ.பி.சி ஆனது 15 நாட்களுக்கு செல்லுபடியாகும் மற்றும் அந்த யூ.பி.சி தான் உங்கள் தற்போதைய சேவை வழங்குநரிடம் இருந்து உங்கள் சேவையை ரிலையன்ஸ் ஜியோவிக்ரு மாற்றும் ஒரு முக்கிய பங்களிப்பாகும்.
இப்போது நீங்கள் ஒரு அருகாமை ரிலையன்ஸ் டிஜிட்டல் கடையை கண்டறிய வேண்டும் மற்றும் பின்னர் அங்கு வருகை புரிந்து வாடிக்கையாளர் விண்ணப்ப படிவத்தை பெற வேண்டும். கொடுக்கப்பட்ட படிவத்தில் உள்ள அனைத்து தேவையான விவரங்களை பூர்த்தி செய்யவும்.
அடுத்து, அடையாள அட்டை, குடியிருப்பு சான்று, ஆதார் / நிரந்தர கணக்கு எண் அட்டை, மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள் போன்ற அனைத்து முக்கிய ஆவணங்களையும் வழங்க வேண்டும். கடையில் தேவையான அனைத்து ஆவணங்களின் நகல்களையும் மற்றும் புகைப்படங்களையும் சேர்த்து, முழுமையாக பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை சமர்ப்பிக்கவும்.
ஒரு புதிய ரிலையன்ஸ் ஜியோ 4ஜி சிம் கார்டு உங்களுக்கு வழங்கப்படும். எனினும், தொலைத் தொடர்பு விதிமுறைகளின் படி, நீங்கள் உங்கள் தற்போதைய சேவை வழங்குநரின் கீழ் அடுத்த ஐந்து நாட்கள் நீடிப்பீர்கள், ஆறாம் நாளில் தற்போதைய சிம் அட்டையை நீக்கி, உங்கள் 4ஜி ஆதரவு கொண்ட கைபேசியில் உங்கள் புதிய ரிலையன்ஸ் ஜியோ 4ஜி சிம் கார்டு நுழைத்து, அதன் சேவைகளை அனுபவிக்க வேண்டியது தான்.
Post a Comment